search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்கள் கடத்தல்"

    விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டர் மதுப்பாட்டில்கள் கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மரக்காணம்:

    புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மதுப்பாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

    விழுப்புரம் அருகே உள்ள கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பெரியமுதலியார் சாவடியில் போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு மதுவிலக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த பஸ்சில் அனுமதியில்லாத வெளிமாநில மதுப்பாட்டில்கள் அட்டைப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. அதில் 200 மதுப்பாட்டில்கள் இருந்தன.

    இதனை தொடர்ந்து போலீசார் செங்கல்பட்டை சேர்ந்த பஸ் டிரைவர் வெங்கடேசன் (வயது 40), கண்டக்டர் பாலாஜி (33) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    மேலும் அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 200 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    அரசு பஸ்சில் மதுப்பாட்டில்கள் கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து பண்ருட்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நேற்று மாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் அந்த மொபட்டை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அதில் 152 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த கோவிந்தன் (வயது 44), அவரது மகன் வெங்கடேசன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரிந்தது.

    உடனே 2 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய கோவிந்தன், அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து ஸ்கூட்டரில் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - மத்திகிரி கூட்டு ரோடு அருகே, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில், போலீசார் மடக்கினார்கள். 

    பின்னர் அந்த வாலிபரை விசாரணை செய்து, வண்டியை சோதனையிட்டபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரீதம் சவுத்ரி(22) என்ற அந்த வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 249 மது பாக்கெட்டுகள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
    ×